​​ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி..!

Jan 22, 2018 8:47 PM

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி பெய்து வருகிறது. 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பனி பொழிந்து வருவதாக வானிலை முகமை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதீத பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் 10 செண்டி மீட்டர் அளவுக்கு பனி தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பனிப்பொழிவால் சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விரைவாக வீடுகளுக்கு சென்று விடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.