​​ சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு இலவசமாக நொய் அரிசி கஞ்சி வழங்கும் தொண்டு அமைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு இலவசமாக நொய் அரிசி கஞ்சி வழங்கும் தொண்டு அமைப்பு


சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு இலவசமாக நொய் அரிசி கஞ்சி வழங்கும் தொண்டு அமைப்பு

Mar 13, 2018 5:35 PM

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தனியார் தொண்டு அமைப்பு ஒன்று மூன்று மாதங்களாக நோயாளிகளுக்கு நொய் அரிசி கஞ்சியை இலவசமாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மலையாளி கூட்டமைப்பு என்ற அந்த அமைப்பானது, மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளுக்கு இலவசமாக நொய் அரிசி கஞ்சியை வழங்கி வருகிறது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பருகக் கூடிய கஞ்சி ஆகும். தற்போது மருத்துவமனைக்கு வெளியே சாலை ஓரத்தில் கஞ்சியை வழங்கி வரும் அவர்கள் மருத்துவமனைக்கு உள்ளேயும் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே, மருத்துவமனை நிர்வாகம் இதற்கு அனுமதி அளிப்பதுடன், கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்கான இட வசதி, சமையல் செய்வதற்கான வசதிகளை உள்ளேயே செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.