​​ நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 94 எம்.பி.க்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 94 எம்.பி.க்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை

Published : Sep 04, 2018 12:17 PMநாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 94 எம்.பி.க்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை

Sep 04, 2018 12:17 PM

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 94 எம்.பி.க்கள் தங்களின் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. சமூக ஆர்வலரான ரச்சனா கல்ரா என்பவர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நாடாளுமன்ற மக்களவைச் செயலாளர், அண்மையில் இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 எம்.பி.க்கள் உள்பட 65 எம்.பி.க்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இதில் அதிகபட்சமாக 9 பேர் காங்கிரஸ், 7 பேர் தெலுங்குதேசம் சேர்ந்தவர்கள். அதேபோல மாநிலங்களவையில் 29 எம்.பி.க்கள் இன்னும் கணக்குகளை அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.