​​ அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி

Sep 04, 2018 12:16 PM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 13 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச், போர்ச்சுக்கலைச் சேர்ந்த ஜோவ் சூசா (Joao Sousa)வை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்குத் தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் கீ நிஷிகோரி (Kei Nishikori) ஜெர்மனி வீரரான பிலிப் கோல்சேபரை (Philipp Kohlschreiber) 6-3 6-2 7-5 என்ற செட் கணகிகல் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் போட்டியில், அமெரிக்க வீராங்கனை மடிசன் கீஸ் (Madison Keys) ஸ்லோவாகியாவின் சிபுல்கோவாவை 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி கால்இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.