​​ முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்க கரடி செய்த காரியம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்க கரடி செய்த காரியம்

Published : Sep 04, 2018 11:55 AM

முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்க கரடி செய்த காரியம்

Sep 04, 2018 11:55 AM

முதுகில் ஏற்பட்ட அரிப்பினைப் போக்க கரடி செய்த செய்கைகள் பார்ப்போரை சிரிப்பில் ஆழ்த்தியது. கனடாவில் உலகின் மிகப் பெரிய கரடிகளான பழுப்பு மற்றும் அபூர்வ கெர்மோட் இனக் கரடிகள் அதிகம் வசிக்கின்றன.

இந்நிலையில் கரடிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆராய்ச்சி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்டி வில்லியம்ஸ் ((Andy Williams)) என்பவர் நதிக்கரையில் கரடிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கரடி அருகில் இருந்த மரத்தின் பக்கத்தில் இரண்டு கால்களால் எழுந்து நின்றது. பின்னர் தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பினை போக்குவதற்கு மரத்தின் மீது முதுகை வைத்து தேய்த்து சொறிந்து கொண்டது.

கரடியின் செய்கை தூரத்தில் இருந்து பார்க்கும்போது நடனம் ஆடுவதைப் போன்று தோன்றியது என்கிறார் வில்லியம்ஸ்.