​​ டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூல் என புகார்; வரும் 16ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நிறுத்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூல் என புகார்; வரும் 16ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நிறுத்தம்

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூல் என புகார்; வரும் 16ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நிறுத்தம்

Mar 13, 2018 5:33 PM

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தயாரிப்பாளர் சங்கம், வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநில திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 23ம் தேதி முதல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும்  படப்பிடிப்புகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு பிந்தய பணிகள், இசை வெளியீடு, டீசர் வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகளும் 16ம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. புதிய திரைப்படங்கள் வெளியீடு ஏற்கெனவே மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.