​​ பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பொதுமக்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பொதுமக்கள்

பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பொதுமக்கள்

Sep 04, 2018 12:27 AM

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்குத் தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாக அளித்தனர்.

image

கொட்டரை கிராமத்தில் நடுநிலைப் பள்ளியாக இயங்கி வந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்று கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அத்துடன் தங்கள் பங்கு நிதியையும் அவர்கள் கொடுக்க முன்வந்ததை அடுத்து பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.image

இதற்காக நடைபெற்ற விழாவில் பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான டேபிள், பீரோ, மின் விசிறி ,தண்ணீர் கேன், உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசையாக கொண்டு வந்து கொடுத்தனர். விழாவில் கலந்துகொண்ட குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தன் பங்குக்கு 50 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார்.