​​ புதிய பள்ளிக் கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய பள்ளிக் கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்

புதிய பள்ளிக் கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்

Sep 03, 2018 11:02 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புதிய பள்ளிக் கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.

நெமிலி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். மேலும் பூனிமாங்காடு, ஆதிவராகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களிலும் அமைச்சர் பங்கேற்றார்.

விழாவில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.