​​ மாவட்ட எஸ்.பி.யான மகளுக்கு டி.சி.பி.யான தந்தை சல்யூட்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவட்ட எஸ்.பி.யான மகளுக்கு டி.சி.பி.யான தந்தை சல்யூட்

மாவட்ட எஸ்.பி.யான மகளுக்கு டி.சி.பி.யான தந்தை சல்யூட்

Sep 03, 2018 10:47 PM

தெலுங்கானாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மகளுக்கு துணைக் காவல் ஆணையரான அவரது தந்தை சல்யூட் அடிக்க நேர்ந்த சம்பத்தை, இருவரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளனர்.

துணை காவல் ஆணையர், ஏ.ஆர்.உமாமகேஸ்வர சர்மா அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளார். இவரது மகள், சிந்து சர்மா ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் நேற்று நடைபெற்ற தெலுங்கானா ராஸ்டிரிய சமிதியின் மாபெரும் பேரணியில் பணி நிமித்தமான முதன் முறையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது, தந்தைமகளுக்கு சல்யூட் அடித்தார்.

இதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகவும், வீட்டில்தான் தாங்கள் வழக்கமான அப்பா-மகளே தவிர, பணியில் தன் மகள் தமக்கு உயரதிகாரிதான் என்பதால் உரிய மரியாதை அளித்ததாக உமாமகேஸ்வர சர்மா தெரிவித்தார். இது தமக்கு பெருமையான தருணம் என அவரது மகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.