​​ எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்


எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

Sep 03, 2018 10:40 PM

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை தன்னுடையது தான் என நீதிமன்றம் அறிவிக்கவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் வெளியூரில்  இருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என அவரது தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்தத் தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கின்  விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.