​​ மும்பையில் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் சாகசம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் சாகசம்

Published : Sep 03, 2018 10:33 PMமும்பையில் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் சாகசம்

Sep 03, 2018 10:33 PM

மும்பையில் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் தொங்கியபடி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான சாகசங்களை செய்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளியன்று இரவு பதினொன்றரை மணிக்கு, ரியே ரோடு (Reay Road) ஸ்டேசனில் இருந்து, காட்டன் கிரீன் ஸ்டேசனுக்குச் செல்லும் போது, பெண் ஒருவர், முதல் வகுப்பு ரயில்பெட்டி நுழைவாயிலில் உள்ள நடுப்புறக் கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் தொங்கியபடி, பக்கவாட்டில் வரும் கம்பங்களைத் தொட்டு விளையாடியதோடு, ரயில் நிற்கும் முன்பே நடைமேடையில் குதித்துச் செல்கிறார்.

மும்பையில் இதுபோல் பல குற்றங்கள் நடந்தபோதும் முதன் முறையாக பெண் ஒருவர் இதுபோன்ற வீடியோ மூலம் சிக்கியுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் பலர் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள போலீசார், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி மூலம் அப்பெண்ணைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.