​​ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலஸ்டைர் குக் ஓய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலஸ்டைர் குக் ஓய்வு


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலஸ்டைர் குக் ஓய்வு

Sep 03, 2018 10:19 PM

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அறிவித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டை நேசிப்பதாகக் கூறியுள்ள அவர், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட இதுவே சரியான தருணம் என நினைப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாகவும் குக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை நீண்ட காலம் தன்வசம் வைத்துள்ளவர் அலஸ்டைர் குக். 33 வயதான அவர், இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதம் உள்பட 12 ஆயிரத்து 254 ரன்கள் குவித்துள்ளார்.