​​ ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வெல்வோம் - சரத்கமல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வெல்வோம் - சரத்கமல்

Published : Sep 03, 2018 10:16 PM

ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வெல்வோம் - சரத்கமல்

Sep 03, 2018 10:16 PM

ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில்  பதக்கம் வெல்வோம் என தமிழக வீரர் சரத்கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற சரத்கமல் சென்னை சேப்பாக்கத்தில்  செய்தியாளர்களிடம் பேசினார். ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ்  ஆடவர் பிரிவில் முதல் முறையாக இந்தியா  வெண்கல பதக்கம்  வென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், உலக தரவரிசையில் தான் 65-வது இடத்தில் இருந்து 35-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தனது திறன் மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.