​​ ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்


ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்

Sep 03, 2018 10:02 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளால்தான் என்றும், பண மதிப்பிழப்பால் அல்ல என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

2016நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் டெல்லியில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின், வங்கி வாராக்கடன் பற்றிய கொள்கையால் 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த வீழ்ச்சிப் போக்கு அடுத்த ஆறு காலாண்டுகளாகத் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததாகக் கூறப்படுவதை ராஜீவ் குமார் மறுத்தார்.