​​ காக்கிநாடாவிலிருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காக்கிநாடாவிலிருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்

காக்கிநாடாவிலிருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்

Sep 03, 2018 6:43 PM

காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும் CIRCAR எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 20 கிலோ கஞ்சா சிக்கியது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டு சென்னை வழியாக செங்கல்பட்டு செல்லும் CIRCAR எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்த நிலையில், இஞ்சினுக்கு அடுத்தபடியாக இருக்கும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் 20 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். 10 பொட்டலங்களில் 2 கிலோ வீதம் மொத்தம் 20கிலோ கஞ்சா அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதைபொருள் தடுப்புப் பிரிவினரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கஞ்சாவை கடத்திவந்தவர்கள் குறித்த விசாரணையும் துவக்கப்பட்டுள்ளது.