​​ ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு


ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

Sep 03, 2018 5:40 PM

ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். டெஹ்தாதி என்ற மாவட்டத்தில் இருந்து 14 பேருடன் புறப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் மஸார் ஐ ஷரிஃப் என்ற இடத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில் உக்ரைனைச் சேர்ந்த விமானப் பணிக்குழு உள்பட 12 பேர் உயிரிழந்துவிட, ஒரு வெளிநாட்டு பைலட்டும், மற்றொரு பணியாளும் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிறரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.