​​ குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்


குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்

Mar 13, 2018 4:44 PM

உரிய அனுமதி பெற்று, நல்ல அனுபவம் கொண்ட மலையேற்ற வீரர்களுடன் தான் பெண்களை டிரெக்கிங் அழைத்துச் சென்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை டிரெக்கிங் கிளப், கடந்த சனிக்கிழமை, குரங்கணி வனத்துறை சோதனைச் சாவடியில், கட்டணம் செலுத்தி முறையாக அனுமதி பெற்று, மலையேற்றத்திற்காக கொழுக்கு மலைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை தங்கள் குழுவினர் மலையேற்றத்தை தொடங்கியபோது, வனப்பகுதி முழுமைக்கும், காட்டுத்தீ இருந்ததற்கான எந்த அறிகுறியும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவடை முடிந்தவுடன் விளைநிலத்தில் உள்ள பயிர் கழிவுகளுக்கும், புற்பூண்டுகளுக்கும் தீ வைப்பது வழக்கமான ஒன்று என்றும், அந்த வகையில், அடிவாரப்பகுதியில் விவசாயிகள் தீ வைத்திருக்கலாம் என மலையேறச் சென்றவர்கள் நினைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம், போடி பள்ளத்தாக்கு முழுவதும் திடீரென வானிலையில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டு, யாரும் எதிர்பாராத வகையில், பலத்த காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிவாரப்பகுதியில் விளைநிலங்களில் பற்ற வைத்த தீ, மளமளவென பரவி, மலை முகட்டை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. பேராபத்திலிருந்து தப்பிக்க கூட மலையேற்ற குழுவினரை கடும் புகைமூட்டம் அனுமதிக்கவில்லை என்றும், இருப்பினும், மலையிலிருந்து தப்பிக்க நினைத்தவர்களை, எதிர் திசையிலிருந்து வேகமாக பரவிய காட்டுத்தீ, தப்பி முயன்றவர்களை முடக்கிப் போட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.