​​ ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

Published : Sep 03, 2018 4:22 PM

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

Sep 03, 2018 4:22 PM

அலுவல் ரகசியச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றம் ஏழாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன், கியாவ் சோ ஓ ஆகியோர் மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து 2017டிசம்பரில் செய்தி சேகரித்தனர்.

அப்போது அலுவல் ரகசியச் சட்டத்தை மீறியதாகக் கூறி மியான்மர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். யாங்கனில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, செய்தியாளர்கள் இருவருக்கும் ஏழாண்டு சிறைத்தண்டனை விதித்தார்.

மியான்மர் அரசின் இந்தச் செயல்பாடு ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரானது என அதற்குக் கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே சிறையில் உள்ள செய்தியாளர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் என மியான்மரை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.