​​ அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Sep 03, 2018 4:16 PM

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், எஸ்தோனியாவின் கையா கனேபி ஆகியோர் விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் ஆறுக்குப் பூச்சியம், நான்குக்கு ஆறு, ஆறுக்கு மூன்று என்கிற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுக் காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலாஸ்விலியை ஆறுக்கு மூன்று, ஆறுக்கு மூன்று, ஆறுக்கு ஏழு, ஆறுக்கு நான்கு என்கிற செட் கணக்கில் வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை ஏழுக்கு ஐந்து, ஆறுக்கு இரண்டு, ஏழுக்கு ஆறு என்கிற செட் கணக்கில் வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிச் சுற்றில் இவர் ரபேல் நடாலை எதிர்கொள்ள இருக்கிறார்.