​​ குரங்குகள் தொல்லைகளிலிருந்து தப்பிக்க உ.பி முதல்வர் யோசனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்குகள் தொல்லைகளிலிருந்து தப்பிக்க உ.பி முதல்வர் யோசனை


குரங்குகள் தொல்லைகளிலிருந்து தப்பிக்க உ.பி முதல்வர் யோசனை

Sep 03, 2018 1:06 PM

அனுமாரை தினமும் வணங்கி, ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால், குரங்குகள் எப்போதும் தொல்லை தராது என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைகள் குறித்து தம்மிடம் புகார் தெரிவித்த பொதுமக்களிடம் இவ்வாறு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார்.

பிருந்தாவனில் நடைபெற்ற சுற்றுலாத்துறை நிகழ்ச்சி பின், அவரை சந்தித்த மதுராவாசிகள், தங்கள் பகுதியில், குரங்குகள் தொல்லை அதிகமிருப்பதாக, புகார் அளித்தனர். அதற்கு, அனுமாரை தினமும் வழிபாடு செய்து, அவரது நாமத்தை ஜெபித்தால், குரங்குகள் தொல்லை தராது என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.