​​ பூண்டி நீர்த்தேக்கத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூண்டி நீர்த்தேக்கத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்


பூண்டி நீர்த்தேக்கத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

Sep 03, 2018 12:36 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது...

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கமும் ஒன்றாகும்.  அதோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு இது முக்கிய சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. 

தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில், நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால், மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக, நேற்று ஞாயிறு விடுமுறைக்காக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.