​​ கடன்சுமையால் தத்தளிக்கும் பாகிஸ்தான் : 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு நியமனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடன்சுமையால் தத்தளிக்கும் பாகிஸ்தான் : 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு நியமனம்

Published : Sep 03, 2018 11:58 AMகடன்சுமையால் தத்தளிக்கும் பாகிஸ்தான் : 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு நியமனம்

Sep 03, 2018 11:58 AM

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை பெரும் கடன்சுமையுடன் தள்ளாடி வரும் நிலையில், 18 பேர் கொண்ட புதிய ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார் பிரதமர் இம்ரான் கான்.

வெளிநாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் குழுவை இதற்காக அவர் நியமித்துள்ளார். தற்போது பாகிஸ்தானின் நடப்பு பற்றாக்குறை கணக்கு 18 பில்லியன் டாலராக உள்ளது. அதன் வெளிநாட்டு கரன்சிகள் கையிருப்பு பத்து பில்லியன் டாலர்கள் உள்ளன.

இதைக் கொண்டு இரண்டு மாதங்களுக்குத்தான் சமாளிக்க முடியும் என்பதால், சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.