​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில், 6 பேருக்கு சம்மன்

Published : Sep 03, 2018 11:50 AM

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில், 6 பேருக்கு சம்மன்

Sep 03, 2018 11:50 AM

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு வழக்கில், முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்ட 6 பேருக்கு திங்களன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வணங்காமுடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மூலம், பேராசிரியர்கள் நியமனம், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகின. 2016-17 ஆம் கல்வி ஆண்டில் இந்தப் பிரிவின் 15 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களில் 18 பேர் தவிர மற்ற 75 பேரும் உரிய ஆவணங்களை கொடுக்கவில்லை.

ஜெயா டி.வியின் சி.இ.ஓ.வும் சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் ஜெயராமனுக்கும் இந்தப் பிரிவில் 3 ஆண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், துணை பேராசிரியர் பணி நியமனத்துக்கு தலா 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் துணை வேந்தராக இருந்த வணங்காமுடி, கே.எஸ்.ஷர்வானி, பாலாஜி, அசோக்குமார், ஜெய்சங்கர், ராஜேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வணங்காமுடி உள்ளிட்ட 6 பேரும் திங்களன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.