​​ சவுத்தாம்டன் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவுத்தாம்டன் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி...

சவுத்தாம்டன் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி...

Sep 03, 2018 11:30 AM

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்திய அணி, தொடரை பறிகொடுத்தது. 

imageசவுத்தாம்டனில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 273 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கேப்டன் விராட் கோலி, ரஹானே தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 184 ரன்களில் சுருண்டது. மொயின் அலி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.