​​ 7 பெரிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.76, 227 கோடி உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 பெரிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.76, 227 கோடி உயர்வு

7 பெரிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.76, 227 கோடி உயர்வு

Sep 03, 2018 2:24 AM

நாட்டிலேயே அதிக சந்தை மூலதனம் கொண்ட 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் மதிப்பு கடந்த வாரத்தில் 76 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், எஸ்பிஐ வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி ஆகிய 7 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. இதில் அதிகபட்சமாக எச்டிஎப்சி வங்கி நிறுவனத்தின் மதிப்பு 20 ஆயிரத்து 685 கோடி ரூபாய் உயர்ந்து, 5 லட்சத்து 59 ஆயிரத்து 888 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஒரே வாரத்தில் மொத்தம் 76 ஆயிரத்து 227 கோடி  ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்ததால், அந்த நிறுவனங்களின் சந்தை மூலதனம் சரிவடைந்துள்ளது.

image

image

நிறுவனங்கள்                                       குறைவு   தற்போதைய மதிப்பு
ரிலையன்ஸ்                             ரூ.23,352 கோடி  ரூ.7,82,470 கோடி 
மாருதி சுசுகி                               ரூ.1998 கோடி    ரூ2,74,809 கோடி
      ஹிந்துஸ்தான் யுனிலீவர்  ரூ.1458 கோடி ரூ.3,84,224 கோடி