​​ குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி

Mar 13, 2018 4:01 PM

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 473 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நியமன ஆணைகளை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் 473 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அம்மா அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கிய எஸ்.பி.வேலுமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.