​​ அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முறைகேடு 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது - பாலகுருசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முறைகேடு 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது - பாலகுருசாமி

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முறைகேடு 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது - பாலகுருசாமி

Sep 03, 2018 12:11 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணத்துக்காக மதிப்பெண்கள் அளிக்கும் முறைகேடு 10 ஆண்டுகளாக நடந்து வருவதாக, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் தேசிய அளவில் முதல் இடத்தில் இருந்தாலும், தரமான கல்வி இல்லை என்று கூறினார்.

கல்விக்காக தன்னை அர்ப்பணித்த, சுயநலம் இல்லாதவர்கள் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டுமென பாலகுருசாமி வலியுறுத்தினார்.