​​ லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

Sep 02, 2018 11:18 PM

லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2017-ம் ஆண்டு முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை இந்தியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், மக்காவ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் விற்கப்பட்ட ஐபோன் 8 மாடல்களில் லாஜிக்போர்டு பழுதிருந்தால் நீக்கித் தருவதாகக் கூறியுள்ளது. எதிர்பாராத விதமாக ஐபோன் 8  ரீஸ்டார்ட் ஆவது, திரைகள் செயல்படாமல் உறைந்துபோவது, போனை ஆன் செய்வதில் கோளாறு ஏற்படுவது உள்ளிட்ட குறைகளை சீர் செய்வதாகக் கூறியுள்ளது.

இலவச ரிப்பேருக்குத் தகுதியான போன் தானா என அறிந்து கொள்ள ஆப்பிளின் இணையதளத்தில், ரிப்பேர் பேஜ் என்ற பகுதியில், தங்கள் ஐபோன் 8 மாடலின் சீரியல் எண்ணை உட்புகுத்தி அறிந்து கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.