​​ நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் - அமைச்சர் காமராஜ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் - அமைச்சர் காமராஜ்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் - அமைச்சர் காமராஜ்

Sep 02, 2018 9:59 PM

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் எனத் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மத்திய அரசு நெருக்குதலாலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவதையும் அமைச்சர் காமராஜ் மறுத்தார். அக்டோபரில் இருந்து புதிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதால் கிடங்குகளில் பராமரிப்புப் பணிக்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நெல் கொள்முதல் நிறுத்தப்படுவது வழக்கம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் திங்கள்கிழமையன்று, தேவை உள்ள 19 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் அறுவடை நடந்து வரும் இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.