​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒழுங்காக இருப்பது ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்தப்படுகிறது : பிரதமர் மோடி

Published : Sep 02, 2018 8:46 PM

ஒழுங்காக இருப்பது ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்தப்படுகிறது : பிரதமர் மோடி

Sep 02, 2018 8:46 PM

ஒழுக்கமாக இருங்கள் என்று கூறுவதை, ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி வேதனை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓராண்டு ஆனதையொட்டி தனது அனுபவங்களை வெங்கையாநாயுடு புத்தகமாக எழுதியுள்ளார். "மூவின் ஆன் முவிங் ஃபார்வேர்டு" என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, வெங்கையாநாயுடு ஒழுக்கமானவர் என்று பாராட்டு தெரிவித்தார்.

ஆனால் ஒழுங்காக இருங்கள் என்று சொல்வது ஜனநாயக விரோதமானது என்று அழைக்கப்படும் நிலை தற்போது இருப்பதாக குறிப்பிட்டார். ஒருவர் ஒழுங்காக இருங்கள் என்று சொன்னால், அவர் ஏதேச்சதிகாரத்துடன் இருக்கிறார் என்று முத்திரை குத்தப்படுவதாக பிரதமர் கூறினார்.

50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் வெங்கையாநாயுடு, எந்த வேலையை செய்தாலும், அதில் விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்ற திட்டம் வெங்கையாநாயுடுவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது என்றும் மோடி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, வேளாண்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் வேளாண்துறையை லாபம் அளிக்கும் விதத்தில் மாற்றாவிட்டால் மக்கள் அதனை கைவிட்டு வெளியேறி விடுவார்கள் என்று கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட வெங்கையாநாயுடு, நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக ஆக்கப்பூர்வமானது அல்ல என்று கவலை தெரிவித்தார்.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.