​​ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Sep 02, 2018 7:56 PM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Sep 02, 2018 7:56 PM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகிய மூன்று பேருக்கும் தலா  30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த சாதனை புரிந்ததற்கான தமது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர், மேலும் பல பதக்கங்கள் வென்று மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.