​​ இதய அறுவைச் சிகிச்சைக்குத் தென்கொரியாவைவிட இந்தியாவில் செலவு அதிகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதய அறுவைச் சிகிச்சைக்குத் தென்கொரியாவைவிட இந்தியாவில் செலவு அதிகம்

இதய அறுவைச் சிகிச்சைக்குத் தென்கொரியாவைவிட இந்தியாவில் செலவு அதிகம்

Sep 02, 2018 6:21 PM

இதய அறுவைச் சிகிச்சைக்குத் தென்கொரியாவைவிட இந்தியாவில் அதிகச் செலவாகிறது. ஆசியாவின் 7 நாடுகளில் இதய அறுவைச் சிகிச்சைக்குச் செலவாகும் தொகை பற்றி மருத்துவ இதழ் ஒன்று ஒப்பீட்டாய்வு செய்துள்ளது.

இந்தியாவின் ஐம்பது தனியார் மருத்துவமனைகளில் இதய அறுவைச் சிகிச்சைக்கு ஆகும் செலவை அந்த இதழ் பட்டியலிட்டு ஆய்வு செய்துள்ளது. அதில் இந்தியாவை விட ஐந்தரை மடங்கு தனியாள் வருமானம் உள்ள தென்கொரியாவில் இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்த செலவே ஆவது தெரியவந்துள்ளது.

இதேபோல் வியட்நாமைவிடவும் இந்தியாவில் அதிகச் செலவாகிறது. அதேநேரத்தில் சீனா, தாய்லாந்து நாடுகளை விட இந்தியாவில் இதய அறுவைச் சிகிச்சைக்குச் செலவு குறைவாக உள்ளது.