​​ தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Sep 02, 2018 5:19 PM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக, அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று காலை சுமார் 10 மணியளவில் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, விஜயகாந்த் உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.