​​ ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Sep 02, 2018 12:21 PM

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில், ராணுவ வீரர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். காஷ்மீரின்  பந்திபுராவில்((Bandipora)) மாவட்டத்தில், தான்நா((Danna)) என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதையறிந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, ராணுவத்தினரும் கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

இந்த பரஸ்பர தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஷிவ்குமார், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், வீர மரணம் அடைந்தார்.