​​ ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே - ப.சிதம்பரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே - ப.சிதம்பரம்


ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே - ப.சிதம்பரம்

Sep 01, 2018 11:52 PM

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே தவிர, நீதிமன்றம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு செல்வது தற்போது வழக்கமாகி விட்டது என்றார்.

இந்த பிரச்சனைக்கு விவாதம் மூலம் தீர்வு காண்பதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே அன்றி நீதிமன்றம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார். ஒரு வேளை மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுகுழு அமைக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனமான டசால்ட், இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.