​​ அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

Published : Sep 01, 2018 9:39 PM

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

Sep 01, 2018 9:39 PM

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் நடால் ஐந்துக்கு 7 என்கிற கணக்கில் முதல் செட்டை இழந்தார்.

பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தால் அடுத்த மூன்று செட்களையும் ஏழுக்கு 5, ஏழுக்கு 6, ஏழுக்கு 6 என்கிற கணக்கில் கைப்பற்றி நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 22 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத் தக்கது. நான்காம் சுற்றில் அவர் ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலாஸ்விலியை எதிர்கொள்கிறார்.