​​ உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் புகாருக்கு ஸ்டீவ் ஸ்மித் மறுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் புகாருக்கு ஸ்டீவ் ஸ்மித் மறுப்பு

உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் புகாருக்கு ஸ்டீவ் ஸ்மித் மறுப்பு

Jan 22, 2018 5:09 PM

உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.

இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த போது 34ஆவது ஓவரில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், உதட்டில் பூசப்பட்டிருந்த தைலத்தை விரலால் தேய்த்து பின்னர், விரலால் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

போட்டிக்குப் பின்னர் இந்தக் காட்சிகளைப் பார்த்து சிரித்த ஸ்டீவ் ஸ்மித், பந்தை பளபளப்பாக்குவதற்காகவே அவ்வாறு செய்ததாக விளக்கமளித்தார்.