​​ அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்

Published : Sep 01, 2018 8:38 PM

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்

Sep 01, 2018 8:38 PM

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் மறுகூட்டல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடம் இரண்டாவது நாளாக சென்னை ஆலந்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

500 கேள்விகள் மற்றும் 200 துணைக் கேள்விகள் என மொத்தம் 700 கேள்விகள் தயார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, மறுகூட்டல் முறையில் மோசடிக்கு உதவியதாக அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என 30 பேருடைய பெயர்களை தெரிவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர்.