​​ ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! விராட் கோலிக்கு ஓய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! விராட் கோலிக்கு ஓய்வு


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! விராட் கோலிக்கு ஓய்வு

Sep 01, 2018 6:46 PM

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. நிர்வாகிகள், இந்திய அணியை அறிவித்தனர்.

இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.