​​ வதந்திகளை தடுக்கத் தவறும் சமூகவலைத்தள நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வதந்திகளை தடுக்கத் தவறும் சமூகவலைத்தள நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

Published : Sep 01, 2018 4:37 PM

வதந்திகளை தடுக்கத் தவறும் சமூகவலைத்தள நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

Sep 01, 2018 4:37 PM

வதந்திகள் பரவுவதைத் தடுக்கத் தவறும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களின் அதிகாரிகள் மீது, கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

கும்பல் படுகொலைகளைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்ய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா (Rajiv Gauba) தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் மீது இறுதி முடிவெடுப்பதற்கான பரிந்துரைகளை, ராஜ்நாத்சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு பிரதமர் மோடியிடம் விரைவில் அளிக்க உள்ளது.

வதந்திகள் பரவுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைப்பதாக வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் உறுதியளித்திருந்தாலும், அதற்கான குறிப்பிடத் தக்க செயல்திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வதந்திகளை முதலில் பதிவிடுவோர் யார் என்பதைக் கண்டறிந்து தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்களின் பொறுப்பாகும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, வதந்திகளைத் தடுக்கத் தவறும் சமூக வலைத்தள நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.