​​ திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ஐம்பொன்சிலை, தங்க நகைகள் திருட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ஐம்பொன்சிலை, தங்க நகைகள் திருட்டு

Published : Sep 01, 2018 4:35 PM

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ஐம்பொன்சிலை, தங்க நகைகள் திருட்டு

Sep 01, 2018 4:35 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவர் கோவிலின் பூட்டை உடைத்துப் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள், தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களில் இரண்டாவதாக விளங்குவது திக்குறிச்சி மகாதேவர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் இன்று காலை நடை திறக்க வந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி, கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், திருமுகம் மற்றும் காணிக்கைப் பணம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்துக் கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சிலைத்திருட்டுத் தடுப்புப் பிரிவினர் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.