​​ இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை... தப்பி ஓடிய கொடூர மனம் கொண்ட தாய்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை... தப்பி ஓடிய கொடூர மனம் கொண்ட தாய்

Published : Sep 01, 2018 3:09 PM

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை... தப்பி ஓடிய கொடூர மனம் கொண்ட தாய்

Sep 01, 2018 3:09 PM

சென்னை குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கொடூர மனம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை குன்றத்தூரை அடுத்த அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய், வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய், கார்னிகா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் நிலையில், நேற்று இரவு விஜய் வேலையில் நிமித்தமாக அலுவலகத்திலேயே தங்கி விட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்ற விஜய், தனது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து அருகிலிருந்தோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குழந்தைகள் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அபிராமிக்கு வேறு ஒருவருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதன் காரணமாக நேற்று இரவு குழந்தைகளுக்கு பாலில் விசம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி, நள்ளிரவில் தப்பியோடியது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், தப்பியோடிய அபிராமியை தேடி வருகின்றனர்.