​​ காவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை


காவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

Sep 01, 2018 1:18 PM

தமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது, பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார்குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4 ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய பெண் காவல் அதிகாரி தமது மேலதிகாரியான ஐஜி மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இக்குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி நியமிக்கப்பட்டதையடுத்து சர்ச்சை எழுந்தது. இந்தக் குழுவில் வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டல் மீறப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் இக்குழுவை மாற்றியமைக்கவும், சம்பந்தப்பட்ட ஐஜியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்பதால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஐஜி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பணியிட மாற்றம் செய்யுமாறும் அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.