​​ அமெரிக்காவில் சுட்டெரித்து வரும் வெயிலால் US ஓபன் டென்னிஸ் நடைமுறையில் மாற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் சுட்டெரித்து வரும் வெயிலால் US ஓபன் டென்னிஸ் நடைமுறையில் மாற்றம்

Published : Sep 01, 2018 2:47 AM

அமெரிக்காவில் சுட்டெரித்து வரும் வெயிலால் US ஓபன் டென்னிஸ் நடைமுறையில் மாற்றம்

Sep 01, 2018 2:47 AM

அமெரிக்காவில் கடும் வெயில் காரணமாக, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்நாட்டில் தற்போது 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. 

நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், வீரர்களும் தங்கள் முழு திறமையும் வெளிப்படுத்த முடியாமல் சோர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, போட்டி நடத்தும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, 3 மற்றும் 4 வது செட்களுக்கு இடையே 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இதனால், வீரர்கள் நிழலில் இளைப்பாறிக் கொள்வதோடு, மயக்கம் போன்ற வெயில் பாதிப்பிலிருந்து மீள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.