​​ நடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Published : Sep 01, 2018 2:35 AMநடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Sep 01, 2018 2:35 AM

ஒரே ஒரு கண் சிமிட்டலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமிட்டி, ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும்வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் இன்று  தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று குறிப்பிட்டது. யாரோ பாடல் எழுதினால், வழக்குப் போடுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? எனக் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம், இஸ்லாமியத்தில் கண்சிமிட்டலுக்கு அனுமதியில்லை என மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது. அதற்கு அது வெறும் பாடல்தான் எனக் கூறிய நீதிபதிகள், ப்ரியா வாரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தனர்.