​​ இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை

இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை

Sep 01, 2018 2:14 AM

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் வருகிற 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் டெல்லி வருகின்றனர். அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

முதல் முறையாக இருதரப்பு இரு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையால் இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் ராஜங்க உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.மேலும் இந்தியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.