​​ வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு

வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு

Sep 01, 2018 2:05 AM

வோடபோன்-ஐடியா இடையேயான இணைப்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுற்றிருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக, வோடபோன்-ஐடியா உருவெடுத்துள்ளது.

இதன் மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 40 கோடியே 80 லட்சமாக மாறியிருக்கிறது. இதன்மூலம், பல்வேறு இலவச சலுகைகளை வழங்கி அதிகளவில் வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் ஈர்த்து, பெரிய செல்போன் சேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியாக, வோடபோன்-ஐடியா மாறிவிட்டிருக்கிறது.

12 இயக்குநர்களை கொண்ட வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் தலைவராக குமார் மங்கலம் பிர்லா((Kumar Mangalam Birla)) அறிவிக்கப்பட்டிருக்கிறார். வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் நாட்டின் தொலைத்தொடர்பு சந்தையில், 40 சதவிகித இடத்தை தமதாக்கி கொண்டிருக்கிறது.