​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வழங்குகிறது ஆப்பிள்

Published : Mar 13, 2018 6:12 PM



டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வழங்குகிறது ஆப்பிள்

Mar 13, 2018 6:12 PM

டிஜிட்டல் முறையில் இதழ்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் ஆப்பிள் கையெழுத்திட்டது. டிஜிட்டல் இதழ்களுக்கான சந்தா சேவையை Next issue media LLC நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் பெற்றது. இதன் மூலம் ஆப்பிளின் டிஜிட்டல் இதழ் சேவையை பயன்படுத்துவோர் மாதம் தோறும் அளவில்லா முறையில் இதழ்களை படிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் ஆஃப் மேகஸின்ஸ் ((Netflix of magazines)) என்ற பெயரில் இந்த இதழுக்கான தளம் அழைக்கப்படுகிறது. இதற்காக பயனர்கள் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. முக்கிய எழுத்தாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பதிப்புகளை மட்டுமே தேர்வு செய்து வழங்க உள்ளதாக ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.