​​ மோடி பங்கேற்கவுள்ள உலக பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி பங்கேற்கவுள்ள உலக பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு

மோடி பங்கேற்கவுள்ள உலக பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு

Jan 22, 2018 5:04 PM

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

வெள்ளைப்போர்வை போல கட்டிடங்கள், சாலைகள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி, பனிக்கட்டிகளை அகற்றி வந்தாலும், தொடர்ந்து பெய்யும் பனிமழையால், இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உடல்முழுவதையும் மூடும் வகையிலான உடைகளை அணிந்து, பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.

வீடுகளைச் சுற்றி பனி படர்ந்துள்ளதால், வாகனங்களை எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளங்களையும் பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளதால், ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இந்த மாநாட்டில் முக்கிய அதிகாரிகளுடன் சென்று பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, இருதரப்பு உறவுகள், பொருளாதாரச் சூழல் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.