​​ வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

Aug 31, 2018 11:49 PM

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வருகிற 14ஆம் தேதி ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5 கோடியே 37 லட்ச ரூபாய் சொத்தினையும், அமெரிக்காவில் 3 கோடியே 28 லட்ச ரூபாய் சொத்தினையும் வாங்கியிருப்பதாகவும், இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் மீது வருமானவரித்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன் நடைபெற்று வருகிறது. வருகிற 3ஆம் தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், மூன்று பேரும், வருகிற 14ஆம் தேதி வரை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டனர்.